நான் உளறியவை உங்களுக்காக.....

நான் உளறியவை உங்களுக்காக.....

2.11.07

நட்பு வட்டத்தினுள்
நண்பர்களாய்
சில வருடங்கள்

புன்னகை தேசத்தின்
பூக்களாய் மலர்ந்து
புன்னகைத்த அந்த நாட்கள்

என் இதயப்புத்தகத்தின்
ஒவ்வொரு பக்கமும்
அவற்றை எண்ணி ஏக்கத்துடன்

மீண்டும் உங்களுடன்
கை கோர்த்து
மீண்டும் புன்னகைப்பேன்

என்றும் அந்நாளை எதிர்நோக்கி
என்றும் அன்புடன்
உங்கள் நண்பன்.


3 comments:

மதுரை சரவணன் said...

//என்றும் அந்நாளை எதிர்நோக்கி
என்றும் அன்புடன்
உங்கள் நண்பன்.//கவிதை அருமை.
வாழ்த்துக்கள்

Anonymous said...

வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Maayavan said...

நன்றி மதுரை சரவணன்..
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்..